Sunday, 8 October 2017

குறுகதை-1

பெங்களூர்:இன்று மாலை என் மனைவி போன் பண்ணி நாளைக்கு லீவுதானே எப்ப வீட்டுக்கு வருவீங்கனு கேட்டா. நானும் கொஞ்சம் வேலை இருக்குடி வர்ரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் நீயும் பாப்பாவும் சாப்பிட்டுட்டு தூங்குங்கனு சொன்னேன். சரி அப்படினா நீங்க வரும்போது சாப்பிட்டு வந்திருங்கனு சொன்னா. ஓகே னு சொல்லீட்டு 9 மணிக்கு ஆபிஸ்ல இருந்து முழு பசியோட கிளம்பினேன். வழியில நாலு அஞ்சு தள்ளுவண்டில தோசை இருக்கானு கேட்டேன். எல்லாரும் இல்லேனு சொல்லிட்டானுக. திடீர்னு நம்மூரு A2B ஞாபகம் வந்துச்சு. உலகத்திலேயே தோசை  இல்லேனாலும் இங்க இருக்கும்டானு சொல்லிக்கிட்டு புல்லெட்ட அங்க விட்டேன். நாம இருக்க பசிக்கு ஒரு தோசை பத்தாதுடானு ஒரு பேமிலி தோசை ஆர்டர் பண்ணிணேன். அங்க. வேலைக்கு இருந்த ஹிந்தி கார பயலுக" சார் அந்த பெருசா இருக்குமே அந்த தோசையானு நக்கலா அவனுகளுக்கு தெரிஞ்ச அரைகுறை  கன்னடதுல கேட்டானுக. ஆமாப்பா அதேதானு என்னோட அரைகுறை கன்னடத்துல நானும்  பதில் சொன்னேன். கடைசில தோசையும் வந்துச்சு ஆனா என்னால பாதி தோசைக்கு மேல தின்ன முடியல, ஏன்னா ஒரு சட்னி ஒரு சாம்பார்தான் இருந்துச்சு.  கடைசியில கடையில பாதி தோசைய பார்சல் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். வழியில ஒரே சிந்தனை. நடு ராத்திரியில இந்த பாதி எச்சி தோசைய குடுத்தா பொண்டாட்டி சண்ட போடுவாளோ, பேசாம இந்த கருமத்த அங்கயே தூக்கிப் போட்டுட்டு வந்துருக்கலாமோனு யோசிச்சுக்கிட்டே வண்டிய ஓட்டிட்டு இருந்தேன்.

அப்பதான் கடவுளே நேர்ல வந்த மாரி ஒரு தெருநாய் குப்பைல சாப்பாடு தேடிட்டு இருந்தது. அத பார்த்தவுடனே எனக்குள்ள இருந்த பாரிவள்ளள் வெளியே வந்தான். ஸ்டைலாக கவரை ஓப்பன் பண்ணி அந்த நாயிக்கு அந்த தோசையை வைத்தேன். அத மோர்ந்து பாத்துட்டு அந்த நாயி சட்டையே பண்ணாம வேற குப்பைய பார்த்து ஓடிச்சு. அப்பதான் " நாயி கூட சட்ட பண்ணாத இந்த A2Bயை நாமதான் நாயி மாதிரி தேடி அலையிறோம்னு" புரிஞ்சுது. 🐶🐶